செவ்வாய், 5 மார்ச், 2013

காதல் என்ன இயற்கையின் உறவோ ?



காதல் என்ன பால்கொண்ட நிலாவோ ?
அதன் பேரொளியால்  என்னை கிறங்கடித்தது

காதல் என்ன ஆர்டிக் பனியோ?
என் இதயத் துடிப்பினை உறையச் செய்தது !

காதல் என்ன ஜப்பான் சுனாமியோ ?
அதன் பேரலையில் என்னை சுருட்டிக் கொண்டது

காதல் என்ன நைல் நதியோ  ?
அதன் வெள்ளப்பெருக்கில் என்னை சிக்க வைத்தது

காதல் என்ன எகிப்தின் பிரமிடோ ?
அதன் அடுக்குகளிடையே என்னை சிறை வைத்தது

காதல் என்ன சஹாரா பாலையோ
அதன் உஷ்ணச் சூட்டில் என்னை எரித்து கொண்டது

காதல் என்ன நீலம் புயலோ?
அதன் கோரப் பிடியில் என்னை புரட்டி எடுத்தது

காதல் என்ன செவ்வாய் கிரகமோ ?
என் நாவில் தண்ணீர் வற்றச் செய்தது

காதல் என்ன  அமேசான் காடோ ?
என் கண்ணைக் கட்டி அதனுள் விட்டது

காதல் என்ன அமெரிக்கப் படையோ ?
என் சொந்த மனதை அபகரித்துக்  கொண்டது

காதல் என்ன பசிபிக் கடலோ ?
அதன் ஆழியில்  என்னை தத்தளிக்க செய்தது

காதல் என்ன ஹிரோசிமா குண்டோ ?
அதன் கதிர்வீச்சில் என் தடமளித்தது

காதல் என்ன எவரஸ்ட் சிகரமோ
அதன் பாதியிலேயே என்னை தொங்க விட்டது

காதல் என்ன சூரிய கிரகணமோ ?
என் வாழ்வில் பாதியை மறைத்துக் கொண்டது

காதல் என்ன டைட்டானிக் கப்பலோ ?
என் உயிரை  அதனுள் மூழ்கடித்தது

காதல் என்ன ட்வின் டவரோ ?
என் மனக் கனவை  தரைமட்டம் செய்தது

காதல் என்ன  உலகப்போரோ ?
அதன் தாக்கம் என் அமைதியை பறித்தது

காதல் என்ன தாஜ் மஹாலோ ?
அதன் உள்ளே என்னை சமாதி செய்தது


படைப்பு: ராசிக் 

திங்கள், 4 மார்ச், 2013

கண்ணாடி வளையல்


அழகான பேரழகி கொஞ்சுத் தமிழ் பேச்சழகி
நான்கு அகவை  கடந்த சிறு அழகி அவள்

தன் செல்ல மொழியில் யுகத்தையே தன்வசமாய்
ஈர்த்தெடுக்கும் வல்லமைக் காரிக்கு தன் தந்தையை
ஈர்க்க கடினமா என்ன !

புரியாத பல  நச்செரிப்பும் கபடமில்லா பொன்சிரிப்பும்
அவளை வீதி உலா கூட்டி வர செய்தது தந்தையை....

இது அவள் நெடு நாள் தொந்தரவு பல நாள் மனக்கனவு...

விடுமுறை நாளை எதிர்நோக்கி  அந்த பிஞ்சின் மனம்,
தந்தையின் உறுதி யின் பேரில்...

இறுதியில்  வந்தது ஞாயிறு உற்சாகமாய் பறந்தாள்
பல நாள் அடைபட்டு விடுபட்ட பட்டாம்பூச்சியாய்...

ஒரு கரம் தந்தையிடம் ஒரு கை தாயிடம் என
இருக பற்றிக்கொண்டு நடுவில் ஆடி வரும் தேர்போல்
மெல்ல ஆடி ஆடி நகர்ந்தாள் அந்த பிஞ்சழகி;

பொருட்காட்சியை வந்தடைந்த சிறு பாவையின்
கண்களில் ஆனந்தம் ஜொலித்தது குதூகலம் குதித்தது

ராட்டினத்தின் சுற்றலிலும் வண்ண ஜால விளக்குகளிலும்
மேலாய் அவளை கவர்ந்திட்டது அந்த கண்ணாடி வளையல்...

வண்ண ஒளியில் மின்னிட்ட அந்த வளையலின் தாக்கம்
அவளை அச்சிறு கடையின் பக்கம் இழுத்தது

தன் மெல்லிய கையின் வீரம் கொண்டு தந்தையை
முன் தள்ளி வாங்கித்தர கோரினாள்  செல்லமாக...

மினுமினுக்கும் கண்ணாடி வளையல் அவளின்
கரத்தில் ஜொலித்தது அவள் இதயம் களித்தது;

சிலுசிலுக்கும் ஓசை வேண்டி கையை குலுக்கிக்கொண்டே
நடந்தாள் அந்த  சின்னழகி;

வளையோசையுடன் தன் சிரிப்பால் போட்டியிட்டாள்
அச் சிறுபல்லழகி;

வீடு நோக்கி செல்கையிலே களிப்பின் உச்சத்தில்
கால் இடறி விழுந்தது  அச்சிறு மொட்டு...

கை ஊணி விழுகையிலே சில்லாய் நொறுங்கியது
கண்ணாடி வளையல் கூடவே உடைந்தது அச்சிறு
பிஞ்சின் இதயம்...

கைத்தூக்கினார் தந்தை விம்மி விம்மி அழுதாள்
அவளோ !

அடிகொண்ட கையை வருடி தேற்றினாள் தாய்;

அவளின் மனதோ காயம்  மறந்து போய்
வளையலின் இழப்பை நாடி அழுதது !
மறு  உலா வரும் நாள் என்று மீண்டும் வருமென
ஏங்கி நகர்ந்தது...