செவ்வாய், 5 மார்ச், 2013

காதல் என்ன இயற்கையின் உறவோ ?



காதல் என்ன பால்கொண்ட நிலாவோ ?
அதன் பேரொளியால்  என்னை கிறங்கடித்தது

காதல் என்ன ஆர்டிக் பனியோ?
என் இதயத் துடிப்பினை உறையச் செய்தது !

காதல் என்ன ஜப்பான் சுனாமியோ ?
அதன் பேரலையில் என்னை சுருட்டிக் கொண்டது

காதல் என்ன நைல் நதியோ  ?
அதன் வெள்ளப்பெருக்கில் என்னை சிக்க வைத்தது

காதல் என்ன எகிப்தின் பிரமிடோ ?
அதன் அடுக்குகளிடையே என்னை சிறை வைத்தது

காதல் என்ன சஹாரா பாலையோ
அதன் உஷ்ணச் சூட்டில் என்னை எரித்து கொண்டது

காதல் என்ன நீலம் புயலோ?
அதன் கோரப் பிடியில் என்னை புரட்டி எடுத்தது

காதல் என்ன செவ்வாய் கிரகமோ ?
என் நாவில் தண்ணீர் வற்றச் செய்தது

காதல் என்ன  அமேசான் காடோ ?
என் கண்ணைக் கட்டி அதனுள் விட்டது

காதல் என்ன அமெரிக்கப் படையோ ?
என் சொந்த மனதை அபகரித்துக்  கொண்டது

காதல் என்ன பசிபிக் கடலோ ?
அதன் ஆழியில்  என்னை தத்தளிக்க செய்தது

காதல் என்ன ஹிரோசிமா குண்டோ ?
அதன் கதிர்வீச்சில் என் தடமளித்தது

காதல் என்ன எவரஸ்ட் சிகரமோ
அதன் பாதியிலேயே என்னை தொங்க விட்டது

காதல் என்ன சூரிய கிரகணமோ ?
என் வாழ்வில் பாதியை மறைத்துக் கொண்டது

காதல் என்ன டைட்டானிக் கப்பலோ ?
என் உயிரை  அதனுள் மூழ்கடித்தது

காதல் என்ன ட்வின் டவரோ ?
என் மனக் கனவை  தரைமட்டம் செய்தது

காதல் என்ன  உலகப்போரோ ?
அதன் தாக்கம் என் அமைதியை பறித்தது

காதல் என்ன தாஜ் மஹாலோ ?
அதன் உள்ளே என்னை சமாதி செய்தது


படைப்பு: ராசிக் 

6 கருத்துகள்:

நன்றாக உள்ளது :-)
//காதல் என்ன ஆர்டிக் பனியோ?
என் இதயத் துடிப்பினை உறையச் செய்தது!//
Very nice :-)

amas32

வணக்கம்...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/blog-post_9.html) சென்று பார்க்கவும்... நன்றி...

திண்டுக்கல் தனபாலன் மிக்க நன்றி :)

"காதல் என்ன டைட்டானிக் கப்பலோ ?
என் உயிரை அதனுள் மூழ்கடித்தது" These lines are Really good yaar...Of course all lines are very very good,,,, I wise you all the best for future..:)

ரொம்ப நன்றி பானு ! உங்களுக்கு பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி :)

கருத்துரையிடுக